SharePoint
A- A A+
Home > About TTSH > News > வாழ்க்கை ப் படிப்பினைக ள் கற்றுத்தரும் உன்ன தத் தாதியர் பணி
​​​Tamil Murasu​ (12 May​ 2023)

கணப்­பொ­ழு­தில் மாறக்­கூ­டிய நிச்­ச­ய­மற்­றது இந்த வாழ்க்கை என்ற புரி­த­லை­யும் மிகுந்த மன­நி­றை­வை­யும் தரு­கிறது இந்த வேலை என்று கூறி­னார் தாதி­யாகப் பணி­பு­ரி­யும் திரு பிர­சாந்த் பிரான்­சிஸ், 29. டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­வ­ரும் இவர், தற்­போது மூத்த தாதி­யாக உள்­ளார்.

தமிழ்­நாட்­டில் பிறந்து வளர்ந்த இவர், சுகா­தா­ரத் துறை­யில் பணி­யாற்­றிய தம் அம்­மா­வி­டம், பலர் உள்­ளார்ந்த அன்­பு­டன் நன்­றி­கூறு­வ­தைக் கண்டு ஊக்­கம் பெற்­றார்.

அந்த இளம்­வ­ய­தி­லி­ருந்தே மனித வாழ்­வின் அடிப்­ப­டைக் கூறான உடல்­ந­லத்தை, பேணும் பணி­யைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்று உறு­தி­கொண்­டார்.

மிகுந்த பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் தாதி­மைப் பட்­டப்­ப­டிப்பை முடித்த இவ­ருக்கு, ஒரு மூத்த சகோ­த­ர­ரும் ஓர் இளைய சகோ­த­ர­ரும் உள்­ள­னர். குடும்­பத்­தின் வறு­மைச் சூழ­லின் கார­ண­மாக 2019ல் சிங்­கப்­பூர் வந்த இவர், அதற்கு முன்­ன­தாக நான்­காண்­டு­கள் சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் தாதி­யாக பணி­யாற்­றி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் வந்­த­போது ஆரம்­ப­கா­லத்­தில் இவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் தாதி­யாக பணி­யாற்­றி­னார். இப்­பி­ரி­வில் அன்­றாடம் தீவி­ர­மான நிலை­யில் உள்ள நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்­சை­ய­ளிப்­பது மிகுந்த சவா­லாக இருந்­த­தா­க­வும் ஒவ்­வொரு நாளும் பல நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­க­ளைச் சந்­தித்­துள்­ள­தா­க­வும் திரு பிர­சாந்த் கூறி­னார்.

குறிப்­பாக, கொவிட்-19 நோய்த்­தொற்று சூழ­லில் நோயின் வீரி­ய­மும் தாக்­க­மும் சரி­வர புரி­யாத சூழ­லில் அவ்­வப்­போது மாறும் சிகிச்­சை­மு­றை­களை நினை­வில் வைத்து நோயா­ளி­களைப் பரா­ம­ரிப்­பது மிகுந்த சவா­லாக இருந்­த­தாக பகிர்ந்­தார் திரு பிர­சாந்த்.

ஒவ்­வொரு நாளும் பாது­காப்பு உடை­யு­டன் நோயா­ளி­க­ளுக்கு உத­வி­னா­லும் பொது­மக்­கள் எங்­களை அணு­கத் தயக்­கம் காட்டி ஒதுக்­கும் சூழல்­கள் மன­வ­ருத்­தத்தை அளித்­த­போ­தும் தொடர்ந்து இன்­மு­கத்­து­டன் பரா­ம­ரித்­தது எங்­க­ளுக்­குள் இருந்த மனித மாண்பை உண­ரும் தரு­ணங்­க­ளாக அமைந்­தன என்­றும் கூறி­னார் பிர­சாந்த்.

ஒரு தாதி­யாக எட்டு ஆண்டு­களுக்­கும் மேலாக தொடர்ந்து பணி­பு­ரி­யும் இவர், “ஒரு­முறை இர­வு­நே­ரத்­தில் இரண்டு குழந்­தை­க­ளுக்­குத் தாயான 40 வயது பெண்­மணி ஒரு­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­விற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டார். பரி­சோ­தித்­துக்­கொண்­டிருக்­கும்­போதே சுய­நி­னைவை இழந்து பேச்­சு­மூச்­சின்றி சரிந்து விழுந்­தார்.

“நெருக்­கடி நிலை­யில் இருந்த அவ­ருக்­குத் தொடர்ந்து சிபி­ஆர் சிகிச்­சை­முறை அளித்­தேன். சற்றே தெளிந்து நிதா­னத்­திற்கு வந்த அவர், 15 நிமி­டங்­க­ளுக்­குள் மீண்­டும் மயங்கி விழுந்­தார். இதே­போல் அன்­றி­ரவு ஏறத்­தாழ நான்கு மணி நேரம் போரா­டி­யும் சிகிச்சை பல­னின்றி அவர் இறந்­தார்,” என்று நினை­வு­கூர்ந்­தார் பிர­சாந்த்.

அன்று மருத்­து­வர்­க­ளால் அவ­ரது மர­ணம் உறு­தி­செய்­யப்­பட்டு சான்­றி­தழ் அளிக்­கப்­பட்டு அவ­ரு­டைய உட­லைக் குடும்­பத்­தார் எடுத்­துச் செல்­லும்­வரை குழந்­தை­க­ளுக்­கா­க­வா­வது அவர் மீண்டு வந்­தி­ருக்­க­லாம் எனத் தாம் ஏங்­கி­யதை மறக்க முடி­யாத அனு­ப­வ­மா­கக் குறிப்­பிட்­டார்.

வேலை­யில் திருப்தி காண்­பது வழக்­கம் என்­றா­லும் இப்­ப­ணி­யில் கடின உழைப்­பு­ட­னும்கூட, இது­போன்ற சம்­ப­வங்­கள் வருத்­தம் அளிக்­க­லாம் என்று குறிப்­பிட்ட திரு பிர­சாந்த், ஒவ்­வொரு நாளும் பல வாழ்க்­கைப் படிப்­பி­னை­களைக் கற்­றுத்­த­ரும் பணி­யா­க­வும் இது உள்­ளது என்­றார்.

​அதி­க­ள­வில் பெண்­கள் உள்ள துறை­யாக இருந்­தா­லும் பணிக்­கும் பாலி­னத்­திற்­கும் தொடர்பு இல்லை என்­றும் தம்­மைப் பொறுத்­த­வரை அனைத்­துத் துறை­க­ளி­லும் அனைத்து பாலி­னத்­தா­ரும் பணி­பு­ரி­வது பரந்­து­பட்ட பார்­வையை அளித்து அத்­து­றை­யின் வளர்ச்­சிக்கு உத­வும் என்­றும் கூறி­னார்.
















2023/05/16
Last Updated on